ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.
ஆலங்குளம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 11ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 18ம்தேதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
18ம்தேதி செவ்வாய்க்கிழமை நடந்த நிறைவு விழாவுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட உதவி இயக்குனர் நில அளவை இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். தாசில்தார் கிருஷ்ணவேல் வரவேற்றார். ஏழு நாட்கள் நடந்த ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவிதொகை, புதிய குடும்ப அட்டை உட்பட 985 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 13 பேருக்கு இலவச வீட்டுமனையும், 10 பேருக்கு நலிந்தோர் உதவிதொகை திட்டம் மூலம் உதவி தொகையும், 77 பேருக்கு உட்பிரிவு இல்லா பட்டா மாறுதல் செய்தது ஆகியவற்றை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.
இதனிடையே தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர் பழனிசங்கர், ஆலங்குளம் நகர செயலா ளர் திருமலைச் செல்வம், நகர பொருளாளர் தாசன் ஆகியோர் கலெக்டரைச்சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ஆலங்குளம் அருகே தென்காசி - நெல்லை மெயின் ரோட்டில் ஆண்டிபட்டி விலக்குக்கு மேல்புறம் ஒரு தனியார் ஹோட்டலுக்கு செல்ல ரோட்டின் நடுவில் நெடுஞ்சாலை துறை தரப்பில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இதுவரை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் கை, கால் முறிந்து காயமடைந்துள்ளனர்ஆகையால் அந்த பாதையை அடைக்க வேண்டும்.
இல்லை என்றால் வரும் திங்கள்கிழமை (24ந்தேதி) தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஓசன்னா பெர்னாண்டோ, மண்டல துணை தாசில்தார் சீனிப்பாண்டி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment