குற்றாலத்தில் திடீர் வெள்ள பெருக்கு - அருவியில் குளித்து கொண்டிருந்த சிறுவன் பலி.
தென்காசி, மே.17, கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் வானிலை ஆய்வு மையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்து பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.
அதில் நாலு பேர்கள் தப்பி வந்த நிலையில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனை மட்டும் காணவில்லை
தென்காசி எஸ் பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் தீயணைப்பு படையினர் காணாமல் போன சிறுவனை வெள்ளப்பெருக்கில் தேடி வந்தனர்.
தற்போது விடுமுறையில் குளிக்க வந்த இடத்தில் திடீரென பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த மாணவன் அஸ்வின்(17) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா வந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன
No comments:
Post a Comment