சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் கூடாது முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு வலியுறுத்தல். - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் கூடாது முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு வலியுறுத்தல்.

 


சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் கூடாது முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு வலியுறுத்தல்.


ஆலங்குளம், ஜூலை 23 பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் கூடாது என முன்னாள் நெல்லை எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.


அவர்கள், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குடில் அமைத்து, அங்கு குடும்பத்தினர் மற்றும் சொந்த பந்தங்களுடன் தங்கியிருந்து, சுவாமி தரிசனம் செய்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர். முந்தைய காலங்களில் எல்லாம் பக்தர்கள் சுமார் 10 நாள்கள் வரை கோவில் பகுதியில் தங்கியிருந்து செல்வது வழக்கம். ஆனால் கரோனா தொற்றுநோய் காலத்திற்கு பிறகு அதை காரணம் காட்டியும், அண்மைக்காலமாக வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற காரணங்களை சொல்லியும், வனத்துறையினர்  கெடுபிடி செய்கின்றனர்.


இதன் காரணமாக, பக்தர்கள் கோவில் பகுதியில் குடில் அமைத்து, அதிக நாள்கள் தங்கி சுவாமியை தரிசனம் செய்ய முடியாத சூழல் உள்ளது.


ஓரிரு நாள்கள் மட்டுமே தங்கி செல்ல அனுமதி வழங்குவதால், ஒரே நேரத்தில் கூட்டம் கூடி, நெரிசல் ஏற்படுவதுடன், பக்தர்களுக்கு பல அசெளரியங்கள் ஏற்படுகின்றன.


மாறாக முன்பு போல், குடில்களில் கூடுதல் நாள்கள் பக்தர்கள் தங்கியிருந்து, சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தால், கோவிலுக்கு செல்லும் போதும் சரி, திரும்பும் போதும் சரி, எந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. 


வனத்துறையினரும், காவல்துறையினரும் விதிக்கும் பயங்கர கட்டுப்பாடானது பக்தர்களுக்கும், அரசுக்கும் பல அசெளரியங்கள் ஏற்பட காரணமாகின்றன.


எனவே, முந்தைய காலங்கள் போல், பக்தர்கள் கூடுதல் நாள்கள் கோவில் பகுதியில் தங்கியிருந்து, சுவாமி தரிசனம் செய்து, அவர்கள் விரும்பும் நேரங்களில் வீடு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும்.


அதோடு, வாகனங்களில் பொருள்களை கொண்டு செல்வதற்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

மேலும், ஆலங்குளம், காளத்திமடம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம் உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து, ஆடி அமாவாசையை யொட்டி சுமார் 5 நாள்கள் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜே ஐசக் இம்மானுவேல் செய்தியாளர் தென்காசி மாவட்டம்

No comments:

Post a Comment