செங்கோட்டை - அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
செங்கோட்டை ஏப்ரல் 27, செங்கோட்டையில்தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை எம்எல்ஏ. கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா திறந்து வைத்தார்.
செங்கோட்டை பேரூந்து நிலையம் முன்பு வைத்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவிட்டதின் பேரில் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமைதாங்கினார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளா் கண்ணன்(எ)ராஜூ, மாவட்டத் துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலாளா் கந்தசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். நகரச்செயலாளா் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைதொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்டச் செயலாளருமான கிருஷண்முரளி(எ)குட்டியப்பா நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிபிஞ்சுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினார்கள் கனியத்தா, திலகா், ஐயப்பன், ராஜகோபாலன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர்உசேன், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வார்டு கழக பிரதிநிதகள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளா் சக்திவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment