செங்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ஊரைச்சேர்ந்த மாணவி இன்பா இவர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது இல்லத்திற்கு நேரில் சென்ற செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்எம். ரஹீம், நூலகர் ராமசாமி, விழுதுகள் சேகர், முத்தரசு, ஆரிஷ் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி இன்பா தெரிவிக்கையில் தொடர் விடாமுயற்சியின் பயனாக நான் தேர்வுக்கு தயாரகி வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்வுக்கு படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம் எனக்கு உதவித் தொகை வழங்கியதாகவும், தேர்வுக்கு படிப்பதற்கான ஏற்ற சூழல்கள்,வசதிகள் அனைத்தும் செங்கோட்டை நூலகத்தில் அமைந்து இருப்பதாகவும் தெரிவித்ததோடு நான் முதல்வன் திட்டத்திற்கும், தமிநாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் செங்கோட்டை நூலகத்திற்கும் நன்றியை தெரிவித்தார்.
No comments:
Post a Comment