தமிழக முதல்வரின் முத்தான திட்டங்கள் இந்த தேர்தலில் எதிரொலிக்கும்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன்
சங்கரன்கோவிலில் வாக்களித்த பின் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் உறுதி
சங்கரன்கோவில். ஏப்.19.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் வாக்களித்தனர். அப்பொழுது திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் கூறியதாவது,
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 33 மாதங்களில் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மற்ற மாநிலங்கள் வியக்கும் வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக செயல்பட்டு வருகின்றார். முதல்வரின் முத்தான திட்டங்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். இந்த தேர்தலில் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் ஒருங்கிணைத்துள்ள இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை முதல்வரிடம் சமர்ப்பிப்பேன். இந்த தேர்தலில் எனக்காக பணிபுரிந்த கழகத்தினர், மற்றும் கூட்டணி கட்சியினர் ,கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இந்த நிகழ்வின் போது நகர செயலாளர் பிரகாஷ், நகர துணை செயலாளர் முத்துக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ், வார்டு செயலாளர்கள் காளிசாமிபாண்டியன், கணேசன், வீராசாமி மற்றும் சதீஷ், ஜெயக்குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
படம்... வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாக்களித்த படம் மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வாக்களித்த படங்கள்
No comments:
Post a Comment