கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஜேசு ஜெகன் மற்றும் முதல்வர் சு.வில்சன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இக்கல்லூரியின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில், கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
நிறுவனத்தைச் சேர்ந்த மனிதவள மேபாட்டு மேலாளர்கள் அருண், பசுபதி ஆகியோர் நேர்முகத் தேர்வை நடத்தினர். இதில், இளங்கலை வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பட்டப்படிப்பு படித்துவரும் இறுதியாண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட35 பேருக்கும் பணி நியமன ஆணைகளை, கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஜேசு ஜெகன், மற்றும் முதல்வர் சு.வில்சன் ஆகியோர் வழங்கினர்கள்.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள், இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்த பின்னர் இவ்வேலையில் சேர அனுமதிக்கப்படுவர்கள் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முடிவில் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு மைய கல்லூரி பேராசிரியர் முனைவர் எழிலரசி நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment