அப்போது ரோட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு அறிந்து கொண்ட அவர்கள் ஜெயராணியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஜெயராணி செயினை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். இதில் தாலி செயின் ஒரு பகுதி ஜெயராணி கையிலும மற்றொரு பகுதி மர்ம நபர்களின் கையிலும் அகப்பட்டு உள்ளது கையில் கிடைத்தைக் கொண்டு மர்ம நபர்கள் இரண்டு பைக்குகளில் தப்பியுள்ளனர். இது குறித்து உடனடியாக வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இவர்களை கைது செய்ய அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டது.
இந்நிலையில் சேந்தமரம் அருகே சந்தேகப்படும் படியாக இரண்டு பைக்குகளில் விரைந்து சென்ற 5 பேரை ஆலங்குளம் சரக சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விரட்டிச் சென்று அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்றவர்கள் அவர்கள் தான் என்ற தகவல் தெரியவந்தது.
இதனை தொடர்ந்த விசாரணையில் அவர்கள் புளியங்குடியை அடுத்துள்ள டிஎன் புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (27), புன்னையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து (28), அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன் (32), சேலம் மாவட்டம் அனுப்பூரைச் சேர்ந்த முத்து மகன் மனோகரன் என்ற மனோ (24), சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் நடேசன் (24) என்பது தெரியவந்தது.
இவர்களில் மணிகண்டன் தற்போது சேலத்தில் தங்கி இருப்பதாகவும், டி என் புதுக்குடி பகுதியில் இரவு கடை நடத்தி வந்த பாலமுருகன் தொழில் நலித்து போனதாகவும் அதனால் களவு செய்ய நண்பர்களை அழைத்ததாகவும் தெரிகிறது. இதன் பெயரில் சேலத்தில் இருந்து கிளம்பி வந்த இவர்கள் இப்பகுதியில் வரும் வழியில் ஒரு பல்சர் பைக்கை திருடிக் கொண்டு பலரிடம் செல்போனை திருடிவிட்டு அதிசயபுரம் வந்து நோட்டமிட்டு கடைக்கார பெண்ணிடம் செயினை பறித்து தப்பி ஓடிய விபரம் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆலங்குளம் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் விரட்டிச் சென்றபோது அவர்கள் பறித்துச் சென்ற சுமார் 25 கிராம் எடையுள்ள செயினில் ஒரு பகுதி தவறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின் ஐந்து பேரும் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலங்குளம் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்ததை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள். இச்சம்பவம் வீரகேரளம்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
No comments:
Post a Comment