சங்கரன்கோவில் நகராட்சியில் 10.06.2023 அன்று "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" என் குப்பை என் பொறுப்பு - ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா தலைமையில் நகர்மன்ற தலைவர் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் ஆலோசனையின் படி துப்புரவு அலுவலர் வழிகாட்டுதலில் சுகாதார ஆய்வாளர்களால் பழைய நகராட்சி அலுவலகத்தில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்பு பொது மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க சங்கர் நகர் இரண்டாம் தெரு மற்றும் மூன்றாம் தெருக்களில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்பு ஊர் குளம் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது, கரையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்பு கீழச் செக்கடி தெருக்களில் கட்டிடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்பு உச்சினிமகாளியம்மன் கோவில் தெருவில் வீட்டிலேயே உரம் தயாரிப்பது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் புதிய நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை தரம் பிரிப்பதில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கௌரவப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. பின்பு பொதுக் கழிப்பிடம், சமுதாய கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment