சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 May 2023

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.  இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  விழாவை முன்னிட்டு காலை இரவு இரு வேலைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் இருவரும் தனித்தனியாக தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  திருக்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், அதிமுக நகர அவை தலைவர் வேலுச்சாமி, நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், பாஜக நகரத் தலைவர் கணேசன், இளைஞரணி தலைவர் விக்னேஷ், கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்ட முத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment