சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 April 2023

சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.  விழாவிற்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.  ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அதிமுக மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.  

இதில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அந்தோணி டேனியல்,   நகர்மன்ற உறுப்பினர் எஸ் டி சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் ஐயப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், மாணவரணி பொருளாளர் ஆர்சி மாரியப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், காளிராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், செந்தில்குமார், நிர்மலாதேவி, கந்தவேல், நூர் முகம்மது உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment