கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்


தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் தி லி தனி 115 நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான விஜயபாண்டியன் ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் ராமசாமியாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜான்துரை, தாருகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தலைவி கவிதாமாரிதுரை, ராமசாமியாபுரம் ஊராட்சி மன்ற தலைவி அந்தோணியம்மாள்சீனிவாசன், தலைவன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவி ஷர்மிளாவிஜய், கூட்டுறவு பணியாளர்கள்  நாணய சங்கம் சிக்கன இயக்குனர் ஸ்டெல்லா மேரி சூசைவியாகப்பன் ஆகியோர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த அவர்களை கட்சி பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாநில அயலக அணி இணை செயலாளர் புகழ்காந்தி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் நல்லசேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, மனோகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, வெற்றிவிஜயன், பெரியதுரை, கிறிஸ்டோபர், சேர்மதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி, மகேஸ்வரி, பராசக்தி, அவைத் தலைவர் முப்பிடாதி, மற்றும் மாணவர் அணி உதயகுமார், கார்த்தி நகர துணை செயலாளர் கேஎஸ்எஸ் மாரியப்பன், கேபிள் கணேசன், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி,  தொமுச சங்கர்ராஜ், பண்டாரக்கண்ணு மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் வடமலாபுரம் கிளைச் செயலாளர் அன்பு, பட்டக்குறிச்சி கிளை செயலாளர் சத்யராஜ், துரைச்சாமியாபுரம் கிளைச் செயலாளர் நவநீதன், கூட்டுறவு சங்க செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு சங்க விற்பனையாளர் சங்கரநாராயணன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி  மாரிதுரை, வார்டு செயலாளர்கள் ஆறுமுகம், கோமதிநாயகம், தங்கவேல், சிவா, முத்துக்குமார் மற்றும் பிரகாஷ், ஜெயக்குமார், கணேசன், சிவாஜி, குட்டி , முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment