சங்கரன்கோவில் தொகுதியில் திமுகவில் 50 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும், சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேச்சு. - தமிழக குரல் - தென்காசி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

சங்கரன்கோவில் தொகுதியில் திமுகவில் 50 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும், சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேச்சு.


சங்கரன்கோவில் தொகுதியில்  திமுகவில் 50 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும், சங்கரன்கோவிலில்  நடந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேச்சு; தொகுதி பொறுப்பாளர் புகழ்காந்தி பங்கேற்பு.

சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய் சாந்தி மஹாலில் வைத்து பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் மாநில அயலக அணி இணைச் செயலாளர் புகழ்காந்தி, வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் நல்லசேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர் புனிதா, ராஜதுரை முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன் தீர்மானங்களை வாசித்தார். 


இதில் திமுக கழக வளர்ச்சிப் பணிகளுக்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் விதத்தில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அந்தந்த பகுதி செயல் வீரர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழக முதல்வர் உத்தரவுப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கழகத்தில் 1 கோடி பேரை சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பின்படி சங்கரன்கோவில் தொகுதியில் குறைந்தபட்சம் 50000 பெயர்களை கட்சியை இணைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதில் பேசிய சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் புகழ்காந்தி வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது போரை சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் நிலை உள்ளது. எனவே ஒன்றிய ,நகர ,பேரூர் கழகத்தினர் தீவிரமாக செயல்பட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் எனவும் ,கழகத்தில் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனவும், அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனவும் பேசினார். 


தொடர்ந்து பேசிய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முத்தமிழ் அறிஞர் இந்தியாவை வியக்கும்  வகையில் ஆட்சி செய்த கலைஞர் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக திமுக தலைவர் அறிவித்தது போல திமுகவில் புதிதாக 1 கோடி பேர்களை இணைக்க வேண்டும் என கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 50000 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும் எனவும்,சங்கரன்கோவில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களுக்கு பொறுப்பாளர்களாக  குருவிகுளம்  மேற்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக மாவட்ட துணை செயலாளர் புனிதாவும், குருவிகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் சங்கரன்கோவில் மாரிசாமியும், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரையும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரனும், மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரையும் சங்கரன் நகரத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபனும், திருவேங்கடம் பேரூர் கழகத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் இவர்களோடு இணைந்து கிளைச் செயலாளர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சேர்த்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கை  பணியையும், பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வரின் சாதனைகளை அனைவரும் எடுத்து கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் எனவும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் மற்றும் மகளிர் திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் வளர்ச்சி பணிகளுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 


பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்து கூறி புதிய உறுப்பினர்களை குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பேசினார்.



இதில் ஒன்றிய கழகச்செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மதுரை, பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, பராசக்தி, நகரத் துணைச் செயலாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், கேபிள் கணேசன் மற்றும் ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முத்தமிழ் அறிஞர் இந்தியாவை வியக்கும்  வகையில் ஆட்சி செய்த கலைஞர் நூற்றாண்டு விழாவை போற்றும் விதமாக திமுக தலைவர் அறிவித்தது போல திமுகவில் புதிதாக 1 கோடி பேர்களை இணைக்க வேண்டும் என கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 50000 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் , வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதமாக செயல்பட்டு முடிக்க வேண்டும் எனவும்,சங்கரன்கோவில் தொகுதி ஒன்றிய, நகர ,பேரூர் கழகங்களுக்கு பொறுப்பாளர்களாக  குருவிகுளம்  மேற்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக மாவட்ட துணை செயலாளர் புனிதாவும், குருவிகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் சங்கரன்கோவில் மாரிசாமியும், மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரையும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரனும்,மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரையும் சங்கரன் நகரத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபனும், திருவேங்கடம் பேரூர் கழகத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய, நகர , பேரூர் கழக நிர்வாகிகள் இவர்களோடு இணைந்து கிளைச் செயலாளர் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சேர்த்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கை  பணியையும், பூத் கமிட்டி அமைக்கும் பணியையும் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வரின் சாதனைகளை அனைவரும் எடுத்து கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் எனவும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் மற்றும் மகளிர் திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் வளர்ச்சி பணிகளுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். 


பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை எடுத்து கூறி புதிய உறுப்பினர்களை குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பேசினார் .இதில் ஒன்றியகழகச்செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், சேர்மதுரை, பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, பராசக்தி, நகரத் துணைச் செயலாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், கேபிள் கணேசன் மற்றும் ஒன்றிய நகர , பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment