திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோவின் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோவின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ரத்தினவேல் குமார் தலைமை வகித்தார்.
மாநில தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், நகர அவைத் தலைவர் மாடசாமி துணைச் செயலாளர் முருகேசன் மாவட்ட பிரதிநிதிகள் அய்யனார் ராமலிங்கம் சங்கர் ஆகியோர் முன்னிலவைத்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு 44 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment